\
சாயல்குடி: சொத்துத் தகராறு - பாட்டியை வெட்டிக் கொலை செய்த பேரன்

சாயல்குடி: சொத்துத் தகராறு - பாட்டியை வெட்டிக் கொலை செய்த பேரன்

சாயல்குடி: சொத்துத் தகராறு - பாட்டியை வெட்டிக் கொலை செய்த பேரன்
Published on

சாயல்குடி அருகே பாட்டியை கொலை செய்த பேரன் தப்பியோடியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூரைச் சேர்ந்தவர் மூதாட்டி மாரியம்மாள் (75). இவருக்கும் இவரது பேரன் மணிபாரதி என்பவருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மூதாட்டி மாரியம்மாள், அவரது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது பேரன் மணிபாரதி அரிவாளால் மாரியம்மாளை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாயல்குடி போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பேரனை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com