\
சத்தியமங்கலம்: சிறுமியை கடத்திச் சென்று திருமணம் - இளைஞர் போக்சோவில் கைது

சத்தியமங்கலம்: சிறுமியை கடத்திச் சென்று திருமணம் - இளைஞர் போக்சோவில் கைது

சத்தியமங்கலம்: சிறுமியை கடத்திச் சென்று திருமணம் - இளைஞர் போக்சோவில் கைது
Published on

சத்தியமங்கலம்: சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரபட்டியைச் சேர்ந்தவர் அன்பரசன் (20). இவர், சத்தியமங்கலத்தில் உள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கிருந்த சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து வெளியே சென்ற சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், பாப்பிரபட்டியில் சிறுமி தங்கியிருப்பதை உறுதி செய்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு சிறுமியுடன் இருந்த அன்பரசனை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com