இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: முக்கிய நபர் கைது

இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: முக்கிய நபர் கைது

இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: முக்கிய நபர் கைது
Published on

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் முக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் கோவையில் அடையாளம் தெரியாத நபர்களால் சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் கலவரம் ஏற்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகுமார் கொலை தொடர்பாக மார்ச் மாதம் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலைக்கு தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் முபாரக் தலைமறைவானார்.

இந்நிலையில், தீவிர தேடலுக்கு பின்னர், காவல் துறையினர் முபாரக்கை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முபாரக் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com