விழுப்புரத்தில் மணல் கொள்ளை: வலுவிழக்கின்றது ரயில்வே மேம்பாலம்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

விழுப்புரத்தில் மணல் கொள்ளை காரணமாக, ரயில்வே மேம்பாலமொன்று வலுவிழக்கிறது. மற்றொரு பக்கம் நிலத்தடி நீர் குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதால், “தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில் பாலம் வலுவிழந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டமானது மிகவும் கீழே இறங்கி விட்டதால் விவசாயம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது” என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம் தான். அதற்கான நீர் ஆதாரமாக இருப்பது, இங்குள்ள தென்பெண்ணை ஆறு மற்றும் சங்கராபரணி ஆறு ஆகியவைதான்.

அப்படியான நிலையில்தான் இம்மாவட்டத்தில் உள்ள ஏனாதி மங்களத்தில் மணல் குவாரியொன்று ஆரம்பிக்கப்பட்டது. அரசு ஒப்புதலுடன் நடைபெரும் இந்த மணல் குவாரியில் 11 ஹட்டேர் அளவு கொண்ட இடத்தில் தான் மணல் அள்ளக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது இங்கு அதிகளவு மணல் அள்ளப்படுவதாக 50க்கும் அதிகமான கிராமங்கள் புகாரளித்துள்ளன. இதைப்பற்றி செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், விரிவாக காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com