முகமூடி கும்பலால் சிறுமியின் கண்முன்னே தாய் மாமனுக்கு நேர்ந்த கொடூரம்

முகமூடி கும்பலால் சிறுமியின் கண்முன்னே தாய் மாமனுக்கு நேர்ந்த கொடூரம்
முகமூடி கும்பலால் சிறுமியின் கண்முன்னே தாய் மாமனுக்கு நேர்ந்த கொடூரம்

மேட்டூர் அருகே சிறுமியின் கண்முன்னே தாய்மாமனை வெட்டிக் கொலை செய்த முகமூடி கும்பல். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த ராஜா, என்பவரின் மகன் ராஜேஷ் (26), இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், அவரது ஊரில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு தனது சகோதரியின் மகளுடன் சென்ற ராஜேஷ் இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்த வந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து ராஜேஷை சிறுமியின் கண் முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுமியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது சிறுமி அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட மர்ம கும்பல் தப்பியோடினர்.

இதையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷை மீட்ட உறவினர்கள் அவரை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com