கத்தியுடன் மிரட்டி ஆடுகள் திருட்டு: காரை விரட்டிச்சென்ற கிராம மக்கள்!

கத்தியுடன் மிரட்டி ஆடுகள் திருட்டு: காரை விரட்டிச்சென்ற கிராம மக்கள்!

கத்தியுடன் மிரட்டி ஆடுகள் திருட்டு: காரை விரட்டிச்சென்ற கிராம மக்கள்!
Published on

சேலத்தில் ஆடுகள் திருடிய, கும்பலைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு நடந்து வந்தது. இதனால், ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை இழந்துள்ளனர். வயல்வெளிகளில் ஆடுகள் மேய்க்கும்போது காரில் வரும் ஆடு திருடர்கள் காரை நிறுத்தி, ஆடுகளை காரில் ஏற்றி சென்று விடுகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தொளசம்பட்டி கிராமத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், வீடுகள் முன்பாக கட்டி வைத்திருந்த ஆடுகளை கார்களில் ஏற்றியுள்ளனர். அதை பார்த்த பெண்கள் சத்தம்போட்டுள்ளனர். அப்போது ஆடு திருடர்கள் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுதடன் காரில் தப்பி சென்றுள்ளனர். 

பெண்கள் சத்தமிடுவதை கேட்ட கிராம மக்கள் எழுந்து வந்து ஆடு திருடர்களை பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது திருடர்கள் இரண்டு கார்களில் தப்பி சென்றுள்ளனர். ஆனால், கிராம இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கார்களை விரட்டி சென்றுள்ளனர். அப்போது ஒரு கார் பழுதாகி நின்றுவிட்டது. அந்த காரை சுற்றி வளைத்து பிடிப்பதற்குள் காரில் இருந்த ஆடுகளை ஒரே காரில் ஏற்றி தப்பித்துள்ளனர். இருந்தபோதும் தப்பி செல்ல முயன்ற ஒரு திருடனையும் ஒரு காரையும் பிடித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
இதையடுத்து பிடிபட்ட ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை கும்பல் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொளசம்பட்டி உட்பட ஐந்து கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் இருந்து திருட்டுபோன 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் இந்த திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆடுகளை மீட்டு தருவதாக போலீஸார் உறுதியளித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com