சேலம்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டணை
திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 17 வயது சிறுமியை, திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற வாழப்பாடியை அடுத்த சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வழக்கில் சேட்டு போக்சோ சட்ட பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து விரக்தியில் இருந்த சிறுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த நிலையில், அடுத்த சில நாட்களில் அவரது தந்தையும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சேட்டுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 30 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கினார்.