”உடனே கிளம்பி அன்னதானப்பட்டிக்கு வாங்க”.. போலீஸ் எனக்கூறி நூதன மோசடி - 5 பேர் கைது

”உடனே கிளம்பி அன்னதானப்பட்டிக்கு வாங்க”.. போலீஸ் எனக்கூறி நூதன மோசடி - 5 பேர் கைது
”உடனே கிளம்பி அன்னதானப்பட்டிக்கு வாங்க”.. போலீஸ் எனக்கூறி நூதன மோசடி - 5 பேர் கைது

சேலத்தில் குற்றப்பிரிவு காவலர்கள் எனக்கூறி இளைஞரிடம் பணம் பறித்தாக ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர், தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய நபர், நான் குற்றப்பிரிவு காவலர் அன்னதானப்பட்டிக்கு உடனே வரவேண்டும் என அழைத்துள்ளார். இதனை நம்பி சேலம் அன்னதானப்பட்டி பகுதிக்கு மணிகண்டன் சென்றுள்ளார்.

அங்கு தமிழரசன், மதன், ஏழுமலை, ஷாஜகான், முருகன் ஆகிய ஐவர் இருந்துள்ளனர். அப்போது ஷாஜகான் என்பவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றுவதாகவும், அதே போன்று முருகன் என்பவர் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றுவதாகவும் கூறி மணிகண்டனை குமரகிரி மலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவரை மிரட்டி செல்போன் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை தமிழரசன் எண்ணிற்கு மாற்றிக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக மணிகண்டன் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஐவரையும் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் குற்றம் உறுதியானதை அடுத்து காவல் துறையினர் ஐவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com