\
சேலம்: மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது

சேலம்: மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது

சேலம்: மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது
Published on

சேலம் அருகே மனநலம் பாதித்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே அக்கரபாளையம் பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளியின் 16 வயது மகள். மனநலம் பாதித்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பாட்டியுடன் வீட்டின் அருகே ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், அவரிடம் ஆசை வார்த்தை கூறி வண்டியில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மல்லூர் அருகே கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மனநலம் பாதித்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், சிறுமியை கடத்திச் சென்ற இனாம்பைரோஜி பகுதியை சேர்ந்த கோபி (29) என்பவரை கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் மனநலம் பாதித்த சிறுமியை மதுபோதையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com