சேலம்: ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்... 24 சவரன் மீட்பு!

சேலம்: ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்... 24 சவரன் மீட்பு!

சேலம்: ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்... 24 சவரன் மீட்பு!

ஆத்தூர் அருகே ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து வந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து 24 பவுன் தங்க நகையை போலீசார் மீட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டப்பகலில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார் சென்றது, அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்,

இந்நிலையில் ஏத்தாப்பூர் போலீசார் செக்கடிப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர், சேலம் அம்மாபேட்டை பண்டித தெருவைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் மனைவி காந்திமதி (45) என்பதும், பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வாழப்பாடி அருகே எடப்பட்டி புதூர் பகுதியில் ராம் என்பவரின் வீட்டை திறந்து 7 சவரன் நகையை திருடி சென்றதும், 18 ஆம் தேதி செகடிப்பட்டியில் சின்னதுரை என்பவர் வீட்டில் 5 சவரன் நகையை திருடியதும் தெரியவந்தது. அதே நாளில் ஏத்தாப்பூரில் ஓய்வு பெற்ற டிரைவர் பாண்டியன் என்பவரது வீட்டில் 19 சவரன் நகையை திருடியதும், ஏத்தாப்பூரில் 19ம் தேதி தினேஷ்குமார் என்பவர் வீட்டில் இரண்டரை சவரன் நகையை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 24 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். மேலும் உடையாபட்டி வங்கியில் 9 சவரன் நகையை அவர் அடகு வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது, இதனைத் தொடர்ந்து, காந்திமதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com