வடமாநில இளைஞர் கைதுpt desk
குற்றம்
சேலம் | சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது
விஜயவாடாவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்திய வடமாநில இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்: தங்கராஜூ
மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணா அம்ரோல், கடந்த சில மாதங்களாக, திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில், சொந்த ஊருக்குச் சென்ற அவர், மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். அப்போது, விஜயவாடா சென்று அங்கிருந்து இரண்டு பெரிய பைகளை கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார், அந்த நபரை ஓமலூர் பஸ் நிலையத்தில் மடக்கிய போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து சோதனை நடத்தினர். சோதனையில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருப்பூருக்கு கஞ்சா கொண்டு செல்வதாக போலீசில், கிருஷ்ணா அம்ரோல் தெரிவித்தார்.
மேலும், அங்கு மாணவர்கள், தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கிருஷ்ணா அம்ரேலை சிறையில் அடைத்தனர்.