காதல் கணவரை கத்தியால் குத்திவிட்டு சிறைக்கு சென்ற மனைவி - பரிதவிக்கும் 7 மாத பெண் குழந்தை

காதல் கணவரை கத்தியால் குத்திவிட்டு சிறைக்கு சென்ற மனைவி - பரிதவிக்கும் 7 மாத பெண் குழந்தை
காதல் கணவரை கத்தியால் குத்திவிட்டு சிறைக்கு சென்ற மனைவி - பரிதவிக்கும் 7 மாத பெண் குழந்தை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் கணவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார் அவரின் மனைவி. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சையிலுள்ள அக்கணவர், இச்சம்பவம் குறித்து ரத்தம் சொட்ட சொட்ட கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

எடப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமம் மசயன்தெரு பகுதியைச் சேர்ந்த பாலமுருகனும், தருமபுரி மாவட்டம் பாரீஸ் நகரைச் சேர்ந்த இலக்கியாவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவேறு சமூதாயத்தைச் சேர்ந்த இவர்களுக்கு தர்ஷனா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் குழந்தை பிறப்புக்கு பின்னர் பாலமுருகனுக்கும் இலக்கியாவுக்கும் கருத்துவேறுபாடு நிலவியதால் இலக்கியா தருமபுரியிலும், பாலமுருகன் எடப்பாடியிலும் வசித்து வந்திருக்கின்றனர்.

தொடர் கருத்து வேறுபாட்டுக்கு மத்தியில், “நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால், என் கணவரும் அவரது குடும்பத்தாரும் என்னை சித்திரவதை செய்கின்றனர்” எனக்கூறி இலக்கியா காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது புகார் அளித்திருந்திருக்கிறார். அவர் அளித்த புகாரின் பேரில், பாலமுருகன் சிறை சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜாமீனில் வெளியே வந்தாலும் தொடர்ந்து வழக்குகளை சந்தித்து வரும் பாலமுருகனின் வீட்டிற்கு குழந்தையுடன் வந்துள்ளார் இலக்கியா. அங்கு வந்து, ‘நான் இனிமேல் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன். வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக குடும்பம் நடத்தலாம்’ என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதை நம்பி அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டதாக பாலமுருகன் கூறுகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மனைவி இலக்கியா செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, “யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்?” என பாலமுருகன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் இலக்கியா தனது கணவர் பாலமுருகனை கத்தியால் சரமாரியாக குத்தியதாக பாலமுருகன் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த பாலமுருகன் அலரியுள்ளார். பாலமுருகனின் அலரல் சத்தம் கேட்டு, இலக்கியாவை தடுக்க வந்த பாலமுருகனின் தாயார் ஜோதி மீதும் கத்தி பட்டு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகவலறிந்த எடப்பாடி போலீசார் பாலமுருகன் கொடுத்த வாக்குமூலத்தின் படி, இலக்கியாவை எடப்பாடி போலீசார் கைது செய்து சேலம் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். தாய் சிறையிலும், தந்தை மருத்துவமனையிலும் இருப்பதை தொடர்ந்து, பிறந்த 7 மாத பெண் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com