தென்காசியில் விஏஓவிடம் இருந்து ரூ. 7.92 லட்சம் பறிமுதல் - பறக்கும்படையினர் அதிரடி
அரியலூரில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அரியலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றும் தேவேந்திரன் என்பவரிடம் இருந்து 1,26,700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கிராம நிர்வாக அதிகாரி சுடலைமுத்து என்பவரிடம் இருந்து ரூ. 7,92,000 பறிமுதல் செய்யப்பட்டது.
சிறிது நேரத்தில் பணத்திற்கான ஆவணத்தை அவர் காண்பித்த நிலையில் கருவூல அதிகாரிகளிடம் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல் பறக்கும் படையினர் அறிவுறுத்தினர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 1,14,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பெ.பொன்னேரியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திட்டக்குடியை சேர்ந்த காலுசிங் என்பவர் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 1,14,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.