ஓசூரில் ரூ.2.21 கோடி பறிமுதல்; பெண் பொறியாளர் கைது

ஓசூரில் ரூ.2.21 கோடி பறிமுதல்; பெண் பொறியாளர் கைது

ஓசூரில் ரூ.2.21 கோடி பறிமுதல்; பெண் பொறியாளர் கைது
Published on

ஓசூரில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட செயற்பொறியாளர் சோபனாவை திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேரு நகரில் வசித்து வரும் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி பிரிவு கோட்ட செயற்பொறியாளர் சோபனா (58) என்பவரது வீட்டில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 2 கோடியே 21 லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கடந்த வாரம் சோபனாவுக்கு அவரது துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அந்த செய்தி வெளிவந்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று ஓசூரில் உள்ள அவரது வீட்டில் மீண்டும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பெண் செயற்பொறியளர் சோபனா வீட்டில் விசாரணை மேற்கொண்டதுடன் பிறகு அங்கிருந்து விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பெண் பொறியாளர் கைதுசெய்யப்பட்டு மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com