சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது அம்பலம்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது அம்பலம்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது அம்பலம்
Published on

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது தெரியவந்துள்ளது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடந்த ரெய்டில் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், கணக்கில்வராத ரூ.10 கோடி, ரூ. 6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர ரூ.80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், ஜவுளிகள், நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி ரொக்கம் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும் வருமான வரித்துறையின் சோதனையில் தெரியவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com