\
மதுரை: அதிகாலையில் பிரபல ரவுடி கொடூரமாக குத்திக் கொலை

மதுரை: அதிகாலையில் பிரபல ரவுடி கொடூரமாக குத்திக் கொலை

மதுரை: அதிகாலையில் பிரபல ரவுடி கொடூரமாக குத்திக் கொலை
Published on

மதுரையில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முத்துக்குமார். இவர் மீது கொலை, கொள்ளை என பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இன்று முத்துக்குமார் ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார். அப்போது முத்துக்குமாரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அதிகாலை முத்துக்குமாரை கொடூரமாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த தெப்பக்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com