சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவங்கள் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் பட்டப்பகலில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்குள் புகுந்து ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மாதவரத்தைச் சேர்ந்த ரவுடி தியாகராஜன் வியாசர்பாடி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது 3 பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் அடங்கிய கும்பல் தியாகராஜனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றது. தகவலறிந்த வந்த போலீசார் மோப்பநாயுடன் வந்து ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராக் காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.