\
ரவுடியை வெட்டிச் சிதைக்கத் துரத்திய ரவுடிகள்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

ரவுடியை வெட்டிச் சிதைக்கத் துரத்திய ரவுடிகள்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

ரவுடியை வெட்டிச் சிதைக்கத் துரத்திய ரவுடிகள்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு!
Published on

சென்னையில் ரவுடியை வெட்டிச் சிதைக்க அரிவாளுடன் ரவுடிகள் துரத்திய காட்சி, சிசிடிவி கேமராவில் சிக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். ரவுடி. இவரை அதே பகுதியை சேர்ந்த முகமூடி அணிந்த 5 பேர் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. ரவுடிகள் அரிவாளுடன் துரத்திச் சென்ற பதபதைக்க வைக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இந்த காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஆந்திராவில் பப்லு என்ற ரவுடி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் பப்லுவின் கூட்டாளிகள் ஹரிகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

தலைமறைவான 5 ரவுடிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், தாக்குதலுக்கு ஆளான ஹரிகிருஷ்ணன் மீதும் 3 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com