குற்றம்
வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள்: கட்டி வைத்து துவைத்த பொதுமக்கள்
வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள்: கட்டி வைத்து துவைத்த பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தில் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்களை பிடித்து தாக்கிய பொதுமக்கள், பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வெங்கட்ராமன் என்பவரின் வீட்டினுள், இன்று காலையில் பயங்கர ஆயுதங்களோடு புகுந்த கொள்ளையர்களைக் கண்டதும் வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டுள்ளனர். தப்பியோட முயற்சித்த கொள்ளையர்களில் 3 பேரை வளைத்துப் பிடித்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மின்கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிடிபட்ட கொள்ளையர்களை பல்லடம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய சில கொள்ளையர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.