கஞ்சா மற்றும் கத்தியுடன் சிக்கிய வழிப்பறிக் கொள்ளையர்கள்

கஞ்சா மற்றும் கத்தியுடன் சிக்கிய வழிப்பறிக் கொள்ளையர்கள்

கஞ்சா மற்றும் கத்தியுடன் சிக்கிய வழிப்பறிக் கொள்ளையர்கள்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை கிராம மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் பைரமங்கலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் பைரமங்கலம் சாலையில் நடந்து வரும்போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த செல்போன்களைப் பறித்துச் சென்றனர். அதையறிந்த அக்கொண்டப்பள்ளி கிராம மக்கள் அந்த மூன்று பேரையும் மடக்கி பிடித்து போலீசாரிடம் ‌ஒப்படைத்தனர். இவர்களை விசாரித்ததில், மூவரும் சேர்ந்து சாலையில் தனியாக நடந்து செல்லும் பொதுமக்களை மிரட்டி பணம் மற்றும் பொருட்களைப் பறித்து செல்வது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com