தாலியை பறிக்க பெண்ணை தரையோடு தரையாக இழுத்துச்சென்ற கொள்ளையர்கள்
சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்துச்சென்ற பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர். அந்த சம்பவத்தின் சிசிடிவி கேமரா காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேனகா என்பவர் இன்று காலை 8 மணியளில் அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரின் கழுத்திலிருந்த 15 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது, தாலி சங்கிலியுடன் மேனகாவையும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் தரதரவென இழுத்துச்சென்றுள்ளனர். தாலி சங்கிலி அறுந்ததால் மேனகா சாலையில் விழுந்தார். கொள்ளையர்கள் நகையுடன் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

