\
செங்கல்பட்டு: டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

செங்கல்பட்டு: டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

செங்கல்பட்டு: டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள், காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடினர்.

கீழவலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு இருந்த சிசிடிவி கேமராவை திருப்பிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு சென்ற இரண்டு காவலர்களையும் தாக்கிவிட்டு, 5 இருசக்கர வாகனங்களில் கொள்ளையர்கள் 5 பேரும் தப்பியுள்ளனர்.

எனினும் அங்கு விரைந்த கூடுதல் காவல்துறையினர் சாலையில் மடக்கி பிடிக்க முயன்றபோது, இருசக்கர வாகனங்களை போட்டுவிட்டு தப்பியோடினர். இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த இரு காவலர்களும் சிகிச்சை பெற்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com