பழனி: மாற்றுத்திறனாளிகளை தண்ணீரில் தள்ளி கொடுமைப்படுத்திய நபர்கள்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மாற்றுத்திறனாளிகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடுமை படுத்தி வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் வீடு - புது ஆயக்குடி
மாற்றுத்திறனாளிகள் வீடு - புது ஆயக்குடிPT

பழனியில் காலை முதலே கனமழை பெய்தது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், சாக்கடைகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியது.

இந்த நிலையில் தான் புதுஆயக்குடி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கக்கூடிய வீட்டிற்கு முன்பாக மழை நீர் தேங்கியுள்ளது. அப்போது தேங்கியிருக்கும் மழை நீரை அகற்ற கோரிக்கை விடுத்து வீடியோ எடுத்த நபர்கள், மாற்றுத்திறனாளி இளைஞர்களை கொடுமைப்படுத்தும் வகையில் தண்ணீரில் தள்ளி விட்டுள்ளனர். இதனால் செய்வது அறியாத தவித்த மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தண்ணீரிலிருந்து எழுந்து அருகே உள்ள வீட்டிற்குள் செல்லக்கூடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

மாற்றுத்திறனாளிகள் வீடு - புது ஆயக்குடி
மாற்றுத்திறனாளிகள் வீடு - புது ஆயக்குடி

மாற்றுத்திறனாளிகளை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com