இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் வன்கொடுமையை உறுதிப்படுத்திய அறிக்கை

இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் வன்கொடுமையை உறுதிப்படுத்திய அறிக்கை
இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் வன்கொடுமையை உறுதிப்படுத்திய அறிக்கை

போபாலில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். பைரேசியா காவல் நிலையத்திற்கு இந்த வெள்ளிக்கிழமை மாலை கிடைத்த தடய அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்) அறிக்கை, அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனை ஐபிசி பிரிவு 376இன் கீழ் நேற்று போலீஸார் வழக்குபதிவு செய்து மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நவம்பர் 2018இல் அந்த பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு, பைரேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கிருந்து போபால் நகரில் இருக்கும் ஹமீடியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். செல்லும் வழியில் தான் விஷம் குடித்துவிட்டதாக தன் சகோதரனிடம் கூறியிருக்கிறாள். அதுபற்றி அவளது சகோதரன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார் என்று பைரேசியா நகர ஆய்வாளர் கைலாஷ் பரத்வாஜ் பழைய அறிக்கையைப் பார்த்துக் கூறியுள்ளார்.

கற்பழிப்பு தொடர்பாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பிறப்புறுப்பு மாதிரிகளுடன் அவருடைய உள்ளுறுப்பு சோதனைக்காக போபாலின் தடவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாக பரத்வாஜ் தெரிவித்தார்.

தங்களுக்கு இப்போது கிடைத்துள்ள எஃப்.எஸ்.எல் அறிக்கைப்படி, அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், இதைவைத்து புதிய விசாரனையைத் தொடங்க இருப்பதாகவும் போலீஸ் இயக்குநர் ஜெனரல் உபேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

எய்ம்ஸ், போபால் இயக்குநர் டாக்டர் சர்மன் சிங், ஒருவர் விஷம் உட்கொள்வதால் இறப்பு ஏற்படும்போது உள்ளுறுப்பு ரசாயன பரிசோதனை செய்வது மிக முக்கியமானது. அதுவே பெண்ணாக இருக்கும்போது பிறப்புறுப்பு மாதிரிகளும் சேர்த்து பரிசோதனைக்காக அனுப்பப்படும். எஃப்.எஸ்.எல் கொடுத்துள்ள இந்த வேதியியம் மற்றும் மூலக்கூறு அறிக்கையில், அந்த பெண்ணில் உடலில் விஷம் இருந்ததுடன், கற்பழிப்பு செய்யப்பட்டதும் உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com