கூவத்தை ஆக்கிரமித்து இருந்த 221 வீடுகள் அகற்றம் - பொதுப்பணி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை

கூவத்தை ஆக்கிரமித்து இருந்த 221 வீடுகள் அகற்றம் - பொதுப்பணி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
கூவத்தை ஆக்கிரமித்து இருந்த 221 வீடுகள் அகற்றம் - பொதுப்பணி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை

சென்னை கோயம்பேடு அருகே பாடிகுப்பத்தில் கூவம் ஆற்றங்கரையில் உள்ள 221 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றும் பணிகள் துவக்கம். குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அம்பத்தூர் அருகே அத்திப்பட்டில் உள்ள குடிசைமாற்று பகுதியில் வீடுகள் வழங்க வேண்டுமென வீடுகளை இழந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

சென்னை மதுரவாயல் முதல் சென்னை கடற்கரை வரை பறக்கும் சாலை அமைக்க கோயம்பேடு அருகே பாடி குப்பம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரையில் ஆக்கிரமித்துள்ள 221 குடியிருப்புகளை பொதுப்பணித்துறை சார்பில் கணக்கீடு செய்து அதிரடியாக அகற்றும் பணி துவங்கி நடைபெற்று வருகின்றது.

சென்னை அருகே 221 குடியிருப்புகளை அகற்றம் பணி நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கோயம்பேடு உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொதுப்பணித் துறை அதிகாரிகள் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் இந்தபகுதியில் வசித்து வருகிறோம். அருகிலுள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளை வாங்கி வியாபாரம் செய்யும் தொழில் மற்றும் கூலி தொழில் செய்து வருகிறோம். இங்குள்ள குடியிருப்புகளை எந்தவித முன்னறிவிப்பு இன்றி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதனால் தங்கள் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி ஆவதோடு வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இங்கிருந்து அகற்றப்படும் பொதுமக்களை அம்பத்தூர் அருகே அதிப்பட்டு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அகற்றப்படும் 221 குடியிருப்புகளுக்கும் செங்கல்பட்டு அருகே நாவலூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் சார்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த ஓராண்டாக பொதுமக்களுக்கு இது குறித்து அறிவித்து இருந்ததாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com