\
குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழப்பா? - உறவினர்கள் புகார்

குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழப்பா? - உறவினர்கள் புகார்

குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழப்பா? - உறவினர்கள் புகார்
Published on

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் பச்சிளம் குழந்தையுடன் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்ன களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிரதீப்(30). இவரது மனைவி வனிதா(26). நிறைமாத கர்ப்பிணியான இவரை கடந்த 22-ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். அங்கு இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த அடுத்த 3 நாட்களில் வீட்டிற்கு செல்லவிருந்த நிலையில் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர், வனிதாவிற்கு டாக்சிம் அலர்ஜி ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதனால் நலமாக இருந்த வனிதாவிற்கு திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா நேற்று உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரது உடலை வாங்கமறுத்த உறவினர்கள், வனிதாவின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என குற்றம்சாட்டினர். மேலும் பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் காவல்நிலையத்துக்கு வந்த உறவினர்கள் மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com