ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் ஓட்டம்

ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் ஓட்டம்

ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் ஓட்டம்
Published on

திருப்பதி அருகே ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரெட்டிகுட்டா வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் செம்மரம் வெட்டிக்கடத்துவதாக ஆந்திரப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு ரோந்து சென்ற போலீஸார், செம்மரங்களுடன் வேன் ஒன்று செல்வதை கண்டுள்ளனர். போலீஸார் வருவதைக் கண்ட 30க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் வேனை விட்டுவிட்டு காட்டிற்குள் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களையும், கடத்தல் வேனையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வனப்பகுதிக்குள் தப்பியோடிய கடத்தல்காரர்களையும் தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com