சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு: ‘ஆன்மீக சொற்பொழிவாளர்’ ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது!

புரட்சியாளர் அம்பேத்கரை பற்றி அவதூறாக கூறியதற்காக, ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
doctor ambedkar - ஆர்.பி.வி.எஸ்.மணியன்
doctor ambedkar - ஆர்.பி.வி.எஸ்.மணியன்pt web

திருவள்ளுவர், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதற்காக ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன், நள்ளிரவு 3:30 மணியளவில் தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாரால் தி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.பி.வி.எஸ்.மணியன்
ஆர்.பி.வி.எஸ்.மணியன்

விஷ்வ பரிஷித் இயக்கத்தின் முன்னாள் தலைவரான இவர், இந்து மதம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதி உள்ளார். கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ்.மணியனை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com