
சென்னையில், ராபிடோ என்ற 'பைக் டாக்சி'யில் பயணித்த இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்த கேசவதன்ராஜ் என்பவர் தனது நண்பரை சந்திக்க பெரம்பூருக்கு சென்றுள்ளார். இதற்காக, ராபிடோ என்ற வாடகை இரு சக்கர வாகன சேவை நிறுவனத்தில் பதிவு செய்து வாகனத்தை வரவழைத்துள்ளார். பைக் டாக்சி மூலம் பெரம்பூர் சென்று கொண்டிருந்தபோது, அயனாவரம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் கேசவதன்ராஜிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த கேசவதன்ராஜ், சத்தமிட்டுள்ளார். மேலும், கேசவதன்ராஜை தாக்கிவிட்டு, அந்த நபர் 22 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுள்ளார். கேசவதன்ராஜ் அளித்த புகாரின் பேரில், வாடகை வாகன ஒட்டுநர் ராஜேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.