பாலியல் வன்கொடுமை வழக்கு: தலைமறைவாக இருந்த இளைஞர் போக்சோவில் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கு: தலைமறைவாக இருந்த இளைஞர் போக்சோவில் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கு: தலைமறைவாக இருந்த இளைஞர் போக்சோவில் கைது
Published on

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வயிற்று வலியில் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்,

அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்,

இதில், மல்லீஸ் (எ) மல்லீஸ்வரன், மற்றும் இளவரசன் ஆகிய இருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த மூன்றாவது குற்றவாளியான மோகன்ராஜை நேற்று கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com