மருத்துவமனைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

மருத்துவமனைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

மருத்துவமனைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி
Published on

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தாயை சிகிச்சைக்காக அழைத்து வந்த இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

ஆம்பூரை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை, நள்ளிரவு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை மருத்துவமனை வளாகத்திற்குத் தூக்கிச்‌சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளது. அந்தப் பெண் கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் விரைந்து வந்து காப்பாற்றியிருக்கின்றனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அயாத் பாஷா, அனிக்கூர் ரஹ்மான் ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com