12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தை உட்பட 3 பேர் கைது - திண்டுக்கல்லில் கொடூரம்
திண்டுக்கல்லில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி (47), இவருக்கு திருமணமாககி சில ஆண்டுகளிலேயே மனைவி இவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமையல் தொழில் செய்து வரும் இவருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், மதுகுடிக்கும் பழக்கம் அதிகதுள்ள லிங்கமூர்த்தி தன் உறவினரான நாகல்நகர் கண்ணன், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நண்பர் முகமது ரபிக் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சோர்வுடன் காணப்பட்டதால், லிங்கமூர்த்தி சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கார்ப்பமாக இருந்ததை அறிந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

