நண்பரை கொலை செய்து விட்டதாக போலீசில் சரணடைந்த இளைஞர்
நண்பரை கொலை செய்து விட்டதாக போலீசில் சரணடைந்த இளைஞர்pt desk

ராணிப்பேட்டை: நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்!

ஆற்காடு அருகே மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: ச.குமரவேல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பூபதி நகர் பகுதியைச் சேர்ந்த ரவி - சரசு தம்பதியரின் மூத்த மகன் ஸ்ரீதர் (25). ஆற்காடு பகுதியில் உள்ள மிக்சர் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஆற்காடு ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகனான மற்றொரு ஸ்ரீதர் (28) இவருக்கு நண்பராக இருந்துள்ளார். இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

Arrested
Arrestedfile

இந்நிலையில், இருவரும் பூபதி நகரில் உள்ள ஸ்ரீதர் வீட்டின் மேல் மாடியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆவேசமடைந்த ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் கத்தியால், பூபதி நகர் ஸ்ரீதரை குத்திக் கொலை செய்ததாக ஆற்காடு நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

நண்பரை கொலை செய்து விட்டதாக போலீசில் சரணடைந்த இளைஞர்
திருப்பத்தூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம்

இதனையடுத்து ஆற்காடு நகர காவல் துறையிறனர். சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த ஸ்ரீதர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com