ராமநாதபுரம்: பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை விஷம் வைத்துக் கொன்றதாக மருமகள் கைது

ராமநாதபுரம்: பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை விஷம் வைத்துக் கொன்றதாக மருமகள் கைது

ராமநாதபுரம்: பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை விஷம் வைத்துக் கொன்றதாக மருமகள் கைது
Published on

உணவில் விஷம் வைத்து  மாமனாரை கொன்றதாக மருமகளை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தைச் சேர்ந்த வினோபா ராஜன் என்பவருக்கும் கனிமொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாததால் விரத்தியில் இருந்துள்ளனர்.

இதையடுத்து வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மருமகள் கனிமொழிக்கு, மாமனார் முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருமகள் கனிமொழி தனது கணவர் வினோபா ராஜனிடம் இது குறித்து பலமுறை கூறியுள்ளார். ஆனால், அதற்கு தனது தந்தை அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று மழுப்பலாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கனிமொழி கடந்த 31.07.21 ஆம் தேதி இரவு குழம்பில் எலிபேஸ்ட் மற்றும் குருணை மருந்து இரண்டையும் கலந்து மாமனாருக்கு உணவு கொடுத்து உள்ளார். அதை சாப்பிட்ட மாமனார் முருகேசன் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையில், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 1.08.21 ஆம் தேதி இறந்துவிட்டார்.

இதையடுத்து மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த கனிமொழி, நேற்று கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் கீழத்தூவல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாமனாரை உணவில் விஷம் வைத்துக் கொன்றதாக மருமகள் கனிமொழியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com