\
பள்ளி மாணவியை கடத்த முயன்றதாக 4 பேர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்த முயன்றதாக 4 பேர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்த முயன்றதாக 4 பேர் போக்சோவில் கைது
Published on

முதுகுளத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்த முயன்றதாக 4 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு அவரது தோழி மூலம், கீழ் மதுரை சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தொலைபேசி மூலம் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் செல்வதற்காக சதீஷ் என்பவர் தனது நண்பர்களுடன் காக்கூர் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

இதையடுத்து பள்ளி மாணவியை கடத்த முற்பட்ட போது மாணவியின் தந்தை, சகோதரன் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முதுகுளத்தூர் போலீசார், சதீஷ், மணிபாரதி, அஜித்குமார், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து போக்சோ வழக்கு மற்றும் சிறுமியை கடத்த முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com