குற்றம்
ராமநாதபுரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - 50 வயது முதியவர் போக்சோவில் கைது
ராமநாதபுரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - 50 வயது முதியவர் போக்சோவில் கைது
பரமக்குடியில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 50 வயது முதியவரை போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் திருமண மண்டபத்தில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் ரவீந்திரன் (50) என்பவர் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திருமண மண்டபத்தின் கழிப்பறை அருகே 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற ரவீந்திரன் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் ரவீந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.