Arrested
Arrestedpt desk

ராமநாதபுரம்: மதுபோதையில் உணவக உரிமையாளரை தாக்கியதாக 4 பேர் கைது - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சாயல்குடி அருகே உணவக உரிமையாளரை தாக்கியதாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் சாயல்குடி - தூத்துக்குடி, கிழக்கு கடற்கரை சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி வழக்கம்போல் தன்னுடைய கடையில் வியாபாரம் முடிந்த நிலையில், கடையை அடைக்க ஆயத்தமாகி வந்துள்ளார். அப்போது மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரிடம் உணவு கேட்டுள்ளனர்.

arrest
arrestfreepik

அதற்கு கடை அடைக்கும் நேரத்தில் உணவுகள் இல்லை என அப்துல் லத்தீப் கூறியுள்ளார். மது போதையில் இருந்த ரவுடி கும்பல் கடை உரிமையாளரை கடுமையாக தாக்கி கடையில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். இதில், பலத்த காயமடைந்த அப்துல் லத்தீப் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திருப்பினார்.

இது தொடர்பாக சாயல்குடி காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை கொடுத்ததோடு, முறையாக புகார் அளித்து 6 நாட்களுக்கு பின் நேற்று சாயல்குடியை சேர்ந்த வெட்டுபுலி என்ற சக்திவேல், ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த மணிகண்டன், தமிழரசன் கரிசல்குளத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த சாயல்குடி போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com