ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேக குற்றவாளிகளிடம் தொடரும் உண்மை கண்டறியும் சோதனை!

ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேக குற்றவாளிகளிடம் தொடரும் உண்மை கண்டறியும் சோதனை!
ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேக குற்றவாளிகளிடம் தொடரும் உண்மை கண்டறியும் சோதனை!

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை உண்மை கண்டறியும் சோதனை இரண்டாவது நாளாக தொடக்கம்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடத்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் வழியில் திருவளர்ச்சோலை என்ற கிராமத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் யாரும் எதிர்பார்காத நேரத்தில் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டார் . இந்த வழக்கை 10 ஆண்டுகளாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை குற்றவாளிகளும் பிடிபடவில்லை. துப்புகொடுப்பவர்களுக்கு சன்மானமும் அறிவித்த நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்ல. எனவே, அதிருப்தி அடைந்த ராம்ஜயத்தின் ச்கோதரர் ரவிசந்திரன் சென்னை உயர்நீதி மன்றத்தில், இவ்வழக்கு சிபிசிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். பின்பு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள், ராமஜெயம் கொலையின்போது திருச்சியில் தங்கி இருந்த ரவுடிகள் பட்டியலை தயாரித்தனர். இதில் இந்த வழக்கில் 12 பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டனர்.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழு திருச்சி நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றது. இதையடுத்து காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தடைய அறிவியல் பரிசோதனை கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்திய ராஜ், சாமி ரவி, மாரிமுத்து, ராஜ்குமார், சிவா லெஃப்ட் செந்தில், கலைவாணன், சுரேந்தர், திலீப் ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நான்கு பேராக பிரித்து நடைபெற்று வருகிறது. நேற்று திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ் சத்யராஜ் ஆகியோரிடம் சுமார் 8 மணி நேரம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்று கலைவாணன் செந்தில், திலீப், ஆகிய மூவரும் தற்போது உண்மை கண்டறியும் சோதனைக்காக மயிலாப்பூரில் உள்ள தடவியல் அறிவியல் துறையில் ஆஜராகி உள்ளனர்.மேலும் சுரேந்தர் என்பவரும் இன்று ஆஜராக உள்ளார். அதேபோல் நேற்று உண்மை கண்டறியும் சோதனையில் ஈடுபட்ட சத்யராஜிடம் இன்று இரண்டாவது நாளும் உண்மை கண்டறியும் சோதனைக்கு அவர் ஆஜராகிறார்.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜயம் கொலை வழக்கு மறுபடியும் விசாரனைக்கு வந்த நிலையில், இதன் முதல் கட்டமாக, கூலி படைகளிடம் விசாரனையை ஆரம்பித்துள்ளது சிபிசிஐடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com