ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கொடூர கொலை: பட்டப்பகலில் பயங்கரம்

ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கொடூர கொலை: பட்டப்பகலில் பயங்கரம்
ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கொடூர கொலை: பட்டப்பகலில் பயங்கரம்

சென்னை வில்லிவாக்கத்தில் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் அவரது வீட்டிற்குள்ளேயே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்திய ரயில்பெட்டி தொழிற்சாலையின் முன்னாள் பணியாளரான புதியவன், ஏஐஓபிசி தொழிற்சங்கத்தின் பொதுமேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில், புதியவனின் வீட்டிற்குள் புகுந்த இரண்டு பேர், 2வது தளத்தில் இருந்த அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் புதியவனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்தபோது புதியவனின் வீட்டிற்கு வந்தது அவரது முன்னாள் கார் ஓட்டுநர் பாஸ்கரன் என தெரியவந்துள்ள நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com