\
கஞ்சா விற்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்தனர்

கஞ்சா விற்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்தனர்

கஞ்சா விற்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்தனர்
Published on: 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மதுரை ஒத்தக்கடை அடுத்த மலைச்சாமிபுரத்தில் வசிக்கும் பெண் தேவகி. இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் மாணவர்களுக்கும், கூலித்தொழிலாளிகளுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கஞ்சா விற்ற பெண்ணை பிடித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் அப்பெண் மீது புகார் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் காவல்நிலையம் ‌முன் குவிந்ததால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com