\
குடிபோதையில் 'ஸ்டேஷனுக்கே கால்' செய்து வம்பிழுத்த நபர்: பாடம் புகட்டிய  போலீசார்

குடிபோதையில் 'ஸ்டேஷனுக்கே கால்' செய்து வம்பிழுத்த நபர்: பாடம் புகட்டிய போலீசார்

குடிபோதையில் 'ஸ்டேஷனுக்கே கால்' செய்து வம்பிழுத்த நபர்: பாடம் புகட்டிய போலீசார்
Published on

புனேவில் குடிபோதையில் காவல்துறை உதவி எண்ணுக்கு தொடர்ந்து அழைத்து வம்பிழுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 40 வயது நபர் ஒருவர் காவல்துறை அவசர உதவி எண் 112க்கு தொடர்ந்து டயல் செய்திருக்கிறார். காவல்துறைக்கு அழைத்தது மட்டுமல்லாமல் தேவையில்லாமல் ஏதேதோ பேசி காவலர்களை கோபப்படுத்தியிருக்கிறார். இது ஒரு நாள் மட்டுமல்ல; ஒரு நாளைக்கு 8லிருந்து 10 கால்கள் என தொடர்ந்து 7 நாட்கள் இதேபோல் வம்பிழுத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் தொலைபேசி எண்ணை வைத்து அந்த நபரை கண்டுபிடித்திருக்கின்றனர். விசாரித்ததில் அவர் குடிபோதையில் அவ்வாறு செய்தது தெரியவந்திருக்கிறது. தற்போது அவரை கைதுசெய்த போலீசார் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com