புதுக்கோட்டை: தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை: தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை: தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடியிசத்தை குறைக்கவும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ரவுடியிசத்தத்தில் ஈடுபட்ட ரவுடிகளை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை நகர காவல் சரகத்தில் ரவுடி சரித்திர பதிவேட்டில் உள்ள, மேல மூன்றாம் வீதியைச் சேர்ந்த சபரீசன், மச்சுவாடியைச் சேர்ந்த ஹரி என்ற ஹரிஹரன், அடப்பன் வயளைச் சேர்ந்த தினேஷ் என்ற நெருப்பு தினேஷ் , ஆகிய மூவரையும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல் அறந்தாங்கி நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அப்துல் லத்தீப் மற்றும் அப்சல் அகமது ஆகிய இருவரையும் போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ரவுடியிசத்தில் ஈடுபடும் நபர்களையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com