போதைப் பொருள் கடத்த முயன்ற இளைஞர் கைது
போதைப் பொருள் கடத்த முயன்ற இளைஞர் கைதுpt desk

புதுக்கோட்டை | இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப் பொருள் பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலங்கைக்கு கடத்த இருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான பெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நாகையைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலை தொடர்ந்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர், நாகையில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை, புதுக்கோட்டை அருகே மேல விளக்குடி பகுதியில் மடக்கிய மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அவர் வந்த காரை சோதனை செய்தனர். அதில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான 95 கிராம் மெத்தமெட்டமைன் என்ற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போதைப் பொருள் கடத்த முயன்ற இளைஞர் கைது
சென்னை | போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வடமாநில இளைஞர் கைது

விசாரணையில் அவர், போதைப் பொருளைஇலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. மேலும் அவர், வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை சிறையில் அடைத்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com