வயிற்றுக்குள் இருந்த பாட்டில்
வயிற்றுக்குள் இருந்த பாட்டில்PT

வயிற்றுக்குள் குளிர்பான கண்ணாடி பாட்டில்; அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றிய அரசு மருத்துவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒரு நபரின் வயிற்றில் குளிர்பானத்தின் (7up) கண்ணாடி பாட்டில் இருந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒரு நபரின் வயிற்றில் குளிர்பானத்தின் கண்ணாடி பாட்டில் இருந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த நபர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ குழுவினர் நீண்ட போராட்டத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்து அந்த பாட்டிலை அப்புறப்படுத்தியுள்ளனர்.

தற்போது அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் அவர் வயிற்றுக்குள் எவ்வாறு 7up பாட்டில் போனது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசனவாயில் வழியாகவே பாட்டில் உள்ளே நுழைந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com