ஏ.டி.எம். கொள்ளை விவகாரம்: மருத்துவர் பணியிலிருந்து நீக்கம் !

ஏ.டி.எம். கொள்ளை விவகாரம்: மருத்துவர் பணியிலிருந்து நீக்கம் !

ஏ.டி.எம். கொள்ளை விவகாரம்: மருத்துவர் பணியிலிருந்து நீக்கம் !
Published on

புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள்‌ பயன்படுத்தி பணம் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட அரசு மருத்துவர், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி காவல்துறைக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பிறர் வங்கி கணக்கிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்படுவது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி 4 நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நூதன திருட்டிற்கு பயன்படுத்திய ஸ்வைப் மிஷின்கள், ஸ்கிம்மர், கணினி, போலி ஏஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். 

இந்த கும்பலில் தொடர்புடைய அரசு மருத்துவமணையில் ஒப்பந்த மருத்துவராகப் பணி புரிந்து வரும் விவேக் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மருத்துவர் விவேக்கிடம் விசாரணை மேற்கொண்டதில், மற்றவர் வங்கி கணக்கிலிருந்து திருடப்படும் பணம் நேரடியாக தன்னுடைய கணக்கிற்கு வந்தவுடன் திருடப்பட்ட பணத்தில் 30 சதவிகிதத்தினை தனக்கு அளிப்பார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவர் மத்திய சிறையில் உள்ளார். 

இதையடுத்து குற்றசம்பவத்தில் ஈடுபட்ட ஒப்பந்த மருத்துவர் விவேக்கின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com