ஆபாசமாக பேசியதில் தேடப்பட்டு வரும் யூடியூபர் ‘பப்ஜி’ மதனின் மனைவி கைது

ஆபாசமாக பேசியதில் தேடப்பட்டு வரும் யூடியூபர் ‘பப்ஜி’ மதனின் மனைவி கைது
ஆபாசமாக பேசியதில் தேடப்பட்டு வரும் யூடியூபர் ‘பப்ஜி’ மதனின் மனைவி கைது

ஆபாசமாக யூ-டியூப் சேனலில் பேசிவந்ததாக தேடப்படும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டை சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணைய சேவை மூலம் பயன்படுத்தி சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக பப்ஜி மதன்மீது புகார்கள் எழுந்தது. அதனையொட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதனைத் தேடிவந்தனர். அவர்மீது தமிழகம் முழுவதும் 159 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவில் நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட சைபர் ஆய்வகம் இருப்பதால், தொழில் நுட்ப உதவியுடன் தப்பிக்கும் மதனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பெருங்களத்தூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து மதனின் தந்தை மாணிக்கம் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகாவை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழைத்துவந்தனர். இன்று காலையிலிருந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபிறகு, மதனின் மனைவி கிருத்திகாவை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

யூடியூபர் மதன் நடத்தும் சேனலின் நிர்வாகி கிருத்திகா என்பதாலும், மதனின் நடவடிக்கைகள் அனைத்தும் கிருத்திகாவுக்கு தெரிந்தே நடந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து காவல்துறை அவரை கைது செய்துள்ளது. மேலும் அவருடைய வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யூடிபூப்பில் ஆபாசமாக பேசி கோடிக்கணக்கில் பப்ஜி மதன் சம்பாதித்தது விசாரணையில் அம்பலமானது. மேலும், அவர் ஆபாசமாக பேசும்போது எதிர்தரப்பில் பேசும் பெண்ணின் குரல் அவருடைய மனைவியினுடையது என்றும் தெரியவந்துள்ளது. இதனால் மதனிடம் உள்ள இரண்டு உயர் ரக சொகுசு கார்களை பறிமுதல் செய்ய மத்திய குற்றப்பிரிவு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும் எனவும், புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com