மருமகளை கொலை செய்துவிட்டு மகனையும் கத்தியால் குத்திய தந்தை!
சொத்து தகராறு காரணமாக மருமகளை மாமனாரே அடித்து கொலை செய்தது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை உண்டாகி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவா் கோவிந்தராசு. இவருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா். இவருக்கு 6 ஏக்கா் வயல்வெளி, 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடைசி மகன் குமார் எலட்ரீசனாக வேலை பார்த்து வருகிறார். குமார் மனைவி அமராவதியின் அம்மா வீட்டியில் ஆண் வாரிசு யாரும் இல்லை என்பதால் அந்தச் சொத்துகள் எல்லாம் அமராவதிக்குதான் வரும் என்று பேசப்பட்டு வந்தது. இதனால் குமாரின் அப்பா இருக்கும் சொத்தை குமார் தவிர்த்து மீதம் இருக்கிற இரண்டு மகன்களுக்கு மட்டும் கொடுக்க முன்வந்துள்ளார். இதனால் சண்டை ஆரம்பமாக நீதி மன்றம்வரை சென்றுள்ளனர்.
இதனால் சொத்து பிரச்சனை தொடர்பாக அரியலூா் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நிலையில், நீதிமன்றத்தில் 3 மகன்களுக்கும் சொத்து பிரித்து கொடுக்கும் வகையில்தான் தீர்ப்பு வரும் எனக் கூறப்பட்டதை தொடர்ந்து மாமனார் கோவிந்தராசு, மாமியார் லோகாம்பாள், கொழுந்தனார் ராதாகிருஷ்ணன், அவருடைய மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து இரவு குளித்துவிட்டு வந்த குமாரின் மனைவி அமராவதியின் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனா்.
வேலைக்கு சென்று இருந்த குமார் வீடு திரும்பும் போது வீட்டில் லைட் எரியாததைக் கண்டு பதட்டம் அடைந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த அவருடைய அப்பா மற்றும் சகோததர்கள் குமாரையும் தாக்கி உள்ளனர். நிலைத் தடுமாறிய அவரை வயிற்றில் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். சத்தமிட்ட குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஒடி வர, குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக புகார் தெரிவிக்க மாமனார் கோவிந்தராசு, மாமியார் லோகாம்பாள், கொழுந்தனார் ராதாகிருஷ்ணன், இவரது மனைவி செல்வி ஆகியோர் தலைமறைவு ஆகிவிட்டனர். இதனை அடுத்து செந்துறை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனா். சொத்துக்காக சினிமா பாணியில் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.