\
ஈரோடு: உணவகங்களில் அதிரடி சோதனை...பதப்படுத்தப்பட்ட சிக்கன், பரோட்டா கண்டுபிடிப்பு

ஈரோடு: உணவகங்களில் அதிரடி சோதனை...பதப்படுத்தப்பட்ட சிக்கன், பரோட்டா கண்டுபிடிப்பு

ஈரோடு: உணவகங்களில் அதிரடி சோதனை...பதப்படுத்தப்பட்ட சிக்கன், பரோட்டா கண்டுபிடிப்பு
Published on: 

ஈரோட்டில் பேக்கரி மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை கண்டறிந்து அழித்தனர்.

ஈரோடு பெருந்துறை சாலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த அதிரடி ஆய்வில் இரண்டு உணவகங்களில் நேற்று சமைத்த சிக்கன், காளான், 20 புரோட்டா மற்றம் சிக்கன் குழம்பு உள்ளிட்ட உணவுகளை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தது கண்டறிந்தனர்.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மற்றும் டீக் கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட நெகிழி பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தலா 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com