மீன் பிடிக்க செல்வதாக கூறியவர், மாந்தோப்பில் கொலை செய்யப்பட்ட சோகம்

மீன் பிடிக்க செல்வதாக கூறியவர், மாந்தோப்பில் கொலை செய்யப்பட்ட சோகம்

மீன் பிடிக்க செல்வதாக கூறியவர், மாந்தோப்பில் கொலை செய்யப்பட்ட சோகம்
Published on

திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் மீன் பிடிக்க செல்வதாக கூறி சென்ற தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் மாந்தோப்பில் பிணமாக மீட்பு. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை.

திருவள்ளூர் அடுத்த கொப்பூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். தனியார் கம்பெனி ஊழியாரன இவருக்கு ஆஷா என்ற மனைவியும் சபீதா என்ற 7 வயது மகளும், சுதர்சன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக குணசேகரன் கிளம்பும் போது, தற்போது நண்பர்களுடன் மீன்பிடிக்க செல்வதாகவும், அப்படியே வேலைக்கு செல்வதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வேலை முடிந்து நேற்று வீட்டிற்கு வராததால் நிறுவனத்தில் கேட்டுள்ளனர். 

அவர் வேலைக்கே வரவில்லை என்று கூறியதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காத நிலையில் இன்று காலை கொப்பூர் சிங்கிலி குட்டை என்ற இடத்தில் உள்ள மாந்தோப்பில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்த போது கொல்லப்பட்டது குணசேகரன் என்பது உறுதியானது. இது குறித்த தகவலின் பேரில் மணவாளநகர் போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் அருகே குணசேகரனின் இரு சக்கர வாகனம் மற்றும் தண்ணிர் கேன், மிக்சர் ஆகியவை இறைந்து கிடந்தது. 

நண்பர்களுடன் மீன் பிடிக்க செல்வதாக கூறி சென்றவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குணசேகரனுடன் போனில் பேசியவர்கள் யார். எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com