தமிழகத்தில் நன்னடத்தை சிறைவாசிகளை கொண்டு மேலும் 5 பெட்ரோல் நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளார். மேலும் சாதிய மோதல்களை தடுக்க கைதிகள் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு செய்த சிறைத்துறை டிஐஜி பழனி, நன்னடத்தை சிறைவாசிகளை கொண்டு செயல்படுத்தப்படும் பெட்ரோல் நிலையத்தில் மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை சிறைவாசிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகவும், இது போன்று 5 பெட்ரோல் நிலையங்கள் உள்ள நிலையில், அந்த எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் டிஐஜி தெரிவித்தார்.
மேலும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சாதிய மோதலை தடுக்க சிறைவாசிகள் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி பழனி கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி வேன் உதவியாளர் போக்சோவில் கைது